Home இலங்கைமீண்டும் நல்லாட்சிக்கு திரும்புவோம் – ஜனாதிபதியிடம் வேண்டுகோள்

மீண்டும் நல்லாட்சிக்கு திரும்புவோம் – ஜனாதிபதியிடம் வேண்டுகோள்

by admin


மீண்டும் நல்லாட்சிக்கு திரும்புவோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  மேலும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் ஜனாதிபதி தலையிடவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது அவர்கள் மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு பதிலாக வேறொருவரை நியமிப்பது தொடர்பில் ஐக்கியதேசிய கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வது தொடர்பிலும் இந்த கூட்டத்தில் கலந்துரைடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் ஜனாதிபதி மைத்திரிபாலவும் இதற்கு சம்மதித்துள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More