Home இலங்கைஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம் நாளை :

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம் நாளை :

by admin

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம் நாளைய தினம், திங்கட்கிழமை இடம்பெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லகஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இக் கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலைவரம் மற்றும் அடுத்த தேர்தலை எதிர்கொள்ளல் என்பன குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகவும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஏனைய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஒன்றை அமைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த கூட்டத்தில் பங்கேற்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து மத்திய குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் ரோஹன லகஷ்மன் பியதாஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More