Home இந்தியாகேரள மாநில நீர்வளத்துறை அமைச்சர் மத்யூ தோமஸ் பதவி விலகியுள்ளார்….

கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சர் மத்யூ தோமஸ் பதவி விலகியுள்ளார்….

by admin


கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சர் மத்யூ தோமஸ் இன்று தான் பதவி வலகுவதாக அறிவித்துள்ளார். தனது பதவி வலகல் குறித்த கடிதத்தினை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனிடம் கையளித்துள்ளார்.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவையில், கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மத்யூ டி தோமஸ் நீர்வளத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.

இரண்டரை ஆண்டுகள் பதவி வகித்த நிலையில் அவர் இன்று தான் பதவிவிலகுவதாக அறிவித்துள்ளார்.  இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த தோமஸ் கட்சி தலைமை எடுத்த முடிவிற்கு கட்டுப்பட்மே தான் பதவிவிலகுவதாக தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More