ஆப்கானிஸ்தான் தலைநகர்காபூலில் பிரித்தானிய பாதுகாப்பு நிறுவனமான ஜி4எஸ் ( G4S ) மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி4எஸ் நிறுவனம் என்பது பிரித்தானிய தூதரகத்தை சுற்றியுள்ள பகுதிகளை பாதுகாக்க உதவும் உலகின் பெரும் பாதுகாப்பு குழுக்களில் ஒன்றாகும்.
நிறுவனத்திற்கு வெளியே கார் குண்டை வெடிக்கச் செய்த தாக்குதலாளிகள் சுற்றுச்சுவரை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்போது கடுமையான துப்பாக்கிசூம் இடம்பெற்றுள்ளதாகவும் இறந்தவர்களில் வெளிநாட்டுகாரர்களும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்கு பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.