இலங்கை பிரதான செய்திகள்

கொழும்பு நோக்கி சென்ற பேருந்து விபத்து – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நால்வர் பலி

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்தே இன்று பிற்பகலில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்துள்ளனர். நீர்கொழும்பு- சிலாபம் பிரதான வீதியின் வலஹாபிட்டிய பகுதியில் சொகுசு பேருந்து வண்டியொன்று வீதியை விட்டு விலகி கால்வாயில் வீழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது

விபத்தில் உயிரிந்தவர்களுள் 3 பெண்களும் அடங்குவதாகவும் இவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களெனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.