Home இலங்கைஅச்சுவேலியில் அயல் வீட்டு விருந்தினரை வாளால் வெட்டிய நபர் கைது

அச்சுவேலியில் அயல் வீட்டு விருந்தினரை வாளால் வெட்டிய நபர் கைது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அச்சுவேலியில் அயல் வீட்டுக்கு வந்த விருந்தினரை வாளால் வெட்டிய நபரை அச்சுவேலி காவல்துறையினர்; கைது செய்துள்ளனர். அச்சுவேலி மகிழடி வைரவர் கோயிலுக்கு அருகில் உள்ள வீட்டுக்கு நேற்றைய தினம் வந்திருந்த விருந்தினரை அயல் வீட்டில் வசிக்கும் நபர் திடீரென வீடு புகுந்து வாளினால் வெட்டியுள்ளார்.

அதனை அடுத்து வாள் வெட்டிற்கு இலக்கான நபரை வீட்டில் இருந்தோர் மீட்டு அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டார்.அதேவேளை சம்பவம் தொடர்பில் அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து வாளினால் வெட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தனிப்பட்ட பகை காரணமாகவே வாளினால் வெட்டியதாக ஆரம்ப விசாரணைகளில் சந்தேக நபர் கூறியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More