இலங்கை பிரதான செய்திகள்

மஹிந்தவையும் அவரது சகாக்கள் 49 பேரையும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு…


மஹிந்த ராஜபக்ஸ உட்பட 49 அமைச்சரவை உறுப்பினர்களையும் மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து தாக்கல் செய்த நீதிப் பேரணை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஓபேசேகர ஆகியோர் முன்னிலையில் இன்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவை இயங்க இடைக்கால தடையுத்தரவை விதிக்கப்பட்டது. இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஸ உட்பட 49 அமைச்சரவை உறுப்பினர்களையும் மேன்முறையீட்டு நீதிமன்றில் எதிர்வரும் 12 ஆம் திகதி (12-12-2018) முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.