நினைவு தூபி திறந்து வைத்து இடம்பெற்ற ஒதியமலை படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வு…
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட எல்லைக் கிராமமான ஒதியமலையில் 1984 ம் ஆண்டு இலங்கை இராணுவத்தால் ஈவிரக்கமின்றி சுட்டுகொல்லப்பட்ட 32 பொதுமக்களில் 34 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் நினைவு தூபி திறந்துவைக்கும் நிகழ்வும் நேற்றுஇடம்பெற்றது
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட எல்லைக் கிராமமான ஒதியமலையில் 1984 ம் ஆண்டு இலங்கை இராணுவத்தால் அதிகாலை வேளையில் கலந்துரையாடலுக்கென அழைத்து சென்று ஒதியமலை கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் வைத்து ஈவிரக்கமின்றி சுட்டுகொல்லப்பட்ட 32 பொதுமக்களின் 34 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும்
வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்களது 2 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் குறித்த 32 பொதுமக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியின் திறப்புவிழா நிகழ்வும் ஒதியமலை பிள்ளையார் ஆலய வளாகத்தில் 32 பொதுமக்களின் நினைவாக அமைக்கப்பட்ட அன்னதான மண்டப திறப்புவிழாவும் இடம்பெற்றது.
முன்னாள் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கந்தசாமி அவர்களது தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா முன்னாள் வடமாகானசபை உறுப்பினர்களான ப சத்தியலிங்கம் ஜி ரி லிங்கநாதன் து ரவிகரன் ஒட்டுசுட்டான் பிரதேச சபை உறுப்பினர் சத்தியசீலன் நெடுங்கேணி பிரதேச சபை உறுப்பினர்களான ஜெயசுதாகர் செந்தூரன் கரைதுரைப்ப்று பிரதேச சபை உறுப்பினர் சி லோகேஸ்வரன் முன்னாள் ஒதியமலை கிராம அலுவலர் வி அருளானந்தம் ஒதியமலை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் இ கிரிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
நிகழ்வில் முதலில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்களது 2 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் குறித்த 32 பொதுமக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியினை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா திறந்து வைத்தார்
தொடர்ந்து குறித்த சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட ஒதியமலை கிராமத்தை சேர்ந்த க சிவபாதம் கி இராசலிங்கம் பொ தேவராசா வீ தில்லைநடராசா த சதாசிவம் இ பரமலிங்கம் கா கணபதிப்பிள்ளை த வேலுப்பிள்ளை த சிவஞானம் த சுப்பிரமணியம் கோ கணபதிப்பிள்ளை க பொன்னம்பலம் த காசிப்பிள்ளை ச சண்முகசுந்தரம் க கனகையா அ ஜெகநாதன் நா சின்னையா சி இராசேந்திரம் வே சிதம்பரபிள்ளை வே சந்திரன் ச மோகநாதன் க சிவசிதம்பரம் ச சபாரத்தினம் ந நவரத்தினம் க சின்னையா நா கேதீஸ்வரன் சி இராசையா ச ரவீந்திரன் க தர்மலிங்கம் க செல்வராஜா அ கெங்காதரன் ச நடராசா ஆகிய 32 பேரினுடைய உற்றார் உறவினர்கள் வருகைதந்து அப்வர்களுக்கு மாலை சூடி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்
நினைவுரைகளை தொடர்ந்து ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் விசேட ஆத்மா சாந்தி பிரார்த்தனைகள் இடம்பெற்று பின்னர் ஒதியமலை பிள்ளையார் ஆலய வளாகத்தில் 32 பொதுமக்களின் நினைவாக அமைக்கப்பட்ட அன்னதான மண்டபம் திறந்து வைக்கப்பட்டு மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.