முந்தைய கணிப்புகளைவிட பூமியின் வெப்பநிலை வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள அண்மைய ஆய்வறிக்கை ஒன்றின் முடிவுகளை அடிப்டையாகக் கொண்டு போலந்தில் நடைபெற்று வரும் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் விவாதம் நடத்துவதற்கான முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.
பருவநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கிடையேயான குழு கடந்த ஒக்டோபர் மாதம் வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்றில், பூமியின் வெப்பநிலை தற்போதைய நிலையைவிட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகமானால் ஏற்படுக்கூடிய விளைவுகள் ஏற்படும் என அறிகையிட்டிருந்தது.
சர்வதேச அளவில் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த அறிக்கை குறித்து விவாதிப்பதற்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளும் எடுத்திருந்த முயற்சிக்கு அமெரிக்கா, சவூதி அரேபியா, ரஸ்யா, குவைத் உள்ளிட்ட நாடுகள் தடை போட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கிடையேயான குழு வின் அறிக்கையை உருவாக்குவதற்கு கடந்த 2015ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் குறித்த வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டில் முடிவுசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகத்துக்கே அச்சுறுத்தலாக விளங்கும் வெப்பமயமாதல் குறித்த முக்கிய கூறுகளை விளக்கும் இந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ளும் முயற்சி தோல்வியில் முடிவடைந்ததால், இதுகுறித்து பேச்சுவார்த்தையை ஆவலோடு எதிர்நோக்கியிருந்த பெரும்பாலான நாடுகளின் பிரதிநிதிகள் மட்டுமல்லாது விஞ்ஞானிகளும் கோபமும், வருத்தமும் அடைந்துள்ளனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது