Home இலங்கையாழ் வீட்டுத் திட்டத்தில் சிபாரிசுகளை, கணக்கெடுக்கப் போவதில்லை…

யாழ் வீட்டுத் திட்டத்தில் சிபாரிசுகளை, கணக்கெடுக்கப் போவதில்லை…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

யாழ்.மாவட்டத்தில் வழங்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்தில் அரசியல் சிபாரிசுகளை கணக்கில் எடுக்காது பாதிக்கப்பட்ட குடும்பங்கள் என உறுதி செய்யப்பட்டவர்களுக்கே வீட்டு திட்டம் வழங்கப்படும் . என யாழ் மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் அரசியல் கட்சி அலுவலகங்களில் வீட்டுத் திட்டம் தொடர்பில் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். என குற்றசாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் அது தொடர்பில் மாவட்டச் செயலாளரிடம் கேட்டபோதே அவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

யாழில் வீட்டு வசதிகள் அற்றவர்கள் வீட்டுத் திட்டம் கோரி பிரதேச செயலகங்களில் பதிவு செய்கின்றனர். அவ்வாறு பதிவு செய்தவர்களின் விபரம் மாவட்டச் செயலகங்களிற்கு அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில் மாவட்டத்திற்கு கிடைக்கும் வீடுகளில் இருந்து நியாயபூர்வமான தகமையின் அடிப்படையில் மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் .  அதனை விட எந்தக் கட்சியானாலும் அல்லது எந்த அரசியல்வாதிகளிடம் சென்று பதிந்தாலும் அதனை நாம் கணக்கில் எடுக்க மாட்டோம்.

அவ்வாறு தற்போது அவர்கள் பதிவுகளை மேற்கொள்வது, அவர்களின் அரசியல் செயற்பாடு என்பதனால் நாம் அதில் தலையிட முடியாது. ஆனால் எந்த அரசியல்வாதிகளின் சிபாரிசுகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது. என்பதனை மட்டும் என்னால் உறுதியாக கூறமுடியும். என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More