Home இலங்கைவடக்கு மக்களின் பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு!

வடக்கு மக்களின் பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு!

by admin

வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு சட்ட ரீதியாக தீர்வு காணப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.நம்பிக்கை வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தில் பல்வேறு குறைப்பாடுகள் காணப்பட்டிருக்கலாம் என்றும் பிரதான கட்சிகள் இணைந்து பணியாற்றிய போது ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக இக்குறைப்பாடுகள் தோற்றம் பெற்றதுடன், அதனால், மக்களுக்கான சேவைகளை நிறைவேற்றுவதில் சில தாமதங்களும் ஏற்பட்டிருக்கலாம் என்றும் இதன்போது ரணில் கூறினார்.

எனினும் கல்வி, சுகாதாரம், வீடமைப்பு போன்ற சமூக பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அதிக தொகையை செலவிட்ட அரசாங்கம் என்ற வகையில் பெருமை அடைவதாகவும் தெரிவித்தார்.

சீரழிந்துள்ள பொருளாதாரத்தை சீரமைக்க முடியும் என்றும் படிப்படியாக நிவாரணம் வழங்கி பாரிய அபிவிருத்தியை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, வடக்கு தமிழ் மக்களின் அவலங்களுக்கு அபிவிருத்தி செயற்பாட்டின் மூலம் சட்ட ரீதியாக தீர்வு வழங்கப் போவதாகவும் சிங்களவர், தமிழர் என்ற ரீதியில் அல்லாது இலங்கையர் என்ற வகையில் ஜனநாயக உரிமையை வென்றெடுத்து நாட்டின் இறைமையை பாதுகாக்க கடமையாற்ற உள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More