குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.சாவகச்சேரி மரக்கறி சந்தையில் காட்டு விலங்கின் இறைச்சியை விற்ற வியாபாரியை கடுமையாக எச்சரித்து நீதிவான் 3 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தார்.
சாவகச்சேரி மரக்கறி சந்தையில் வியாபாரி ஒருவர் காட்டு விலங்கின் இறைச்சியை விற்பனை செய்கின்றார் என கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்கு சென்ற பொது சுகாதார பரிசோதகர் பி. தளிர்ராஜ் குறித்த வியாபரியிடம் இருந்து மூன்று கிலோ இறைச்சியை கைப்பற்றியுள்ளார்.
அதனை அடுத்து நேற்று புதன்கிழமை கைப்பற்றப்பட்ட இறைச்சியையும் , குறித்த வியாபாரியையும் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய போது வியாபாரி தனது குற்றத்தை ஏற்றுகொண்டதை அடுத்து வியாபாரியை கடுமையாக எச்சரித்த நீதிவான் 3 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தார்.