Home இலங்கைஆவணங்களின்றி மது போதையில் வாகனம் செலுத்தியவருக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டம்

ஆவணங்களின்றி மது போதையில் வாகனம் செலுத்தியவருக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சாரதி அனுமதி பத்திரம் , வாகன வரிப்பத்திரம் , காப்புறுதி பத்திரமின்றி மது போதையில் வாகனம் செலுத்தியவருக்கு , சாவகச்சேரி நீதிவான் 20 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளார்.

சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் நேற்று புதன்கிழமை காவல்துறையினரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சந்தேக நபர் குற்றத்தை குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்தே நீதிவான் 20 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தார்.

அதேவேளை சாரதி அனுமதி பத்திரமின்றி , மது போதையில் வாகனம் செலுத்திய மற்றுமொருவருக்கு 11 ஆயிரம் ரூபாய் தண்டமும் , காவல்துறையினரின் சமிஞையை மீறி சென்ற நபருக்கு 11 ஆயிரம் ரூபாய் தண்டமும் , காப்புறுதி பத்திரமின்றி வாகனம் செலுத்திய இருவருக்கு தலா 7 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்து நீதிவான் தீர்ப்பளித்தார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More