அரசியலமைப்பை திட்டமிட்டு மீறியதாக தெரிவித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கெதிதிராக அரசியல் குற்றவியல் பிரேரணையை கொண்டுவரவுள்ளதாக ஜேவிபி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பிற்கு முரணான விதத்தில் செயற்பட்டார் எனும் நீதிமன்றத் தீர்ப்பை அடிப்படையாகவைத்தே அரசியல் குற்றவியல் பிரேரணையை கொண்டுவரவுள்ளதாக ஜேவிபியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தொடர்ந்தும் அரசியலமைப்பை மீறினால் அவருக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவோம் என தெரிவித்துள்ள அவர் ஜனாதிபதிக்கெதிராக அரசியல் குற்றவியல் பிரேரணையை கொண்டுவரமுடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அரசமைப்பு சதியில் ஈடுபட்ட அனைவருக்கெதிராகவும் விசேட விசாரணையை முன்னெடுக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க பாராளுமன்றத்தில் இதற்கான நடவடிக்கைகளை தமது கட்சி முன்னெடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.