Home இலங்கைஎதிர்வரும் புதன்கிழமைக்குள் புதிய அரசாங்கம்

எதிர்வரும் புதன்கிழமைக்குள் புதிய அரசாங்கம்

by admin


புதிய அரசாங்கமொன்று எதிர்வரும் புதன்கிழமைக்குள் அமைக்கப்படுவதுடன் அமைச்சரவை சத்தியப்பிரமாண நிகழ்வும் இடம்பெறும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் இரு தினங்களில் யாரைப் பிரதமராக நியமிப்பது என்பது தொடர்பில் ஜனாதிபதி முடிவுகளை எடுப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை அமைக்கும் பட்சத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் அரசாங்கத்தின் பதவிநிலைகளை வகிக்கத் தயாராக இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More