145
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட ஒரு அமைப்பும் தயாராக இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நேற்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், ஐக்கிய தேசிய முன்னணியினர் ஜனாதிபதியுடன் மேற்கொண்ட சந்திப்பின்போதே அவர் இதனை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார். மேலும் எதிர்காலத்தில் ஜனாதிபதியுடன் புரிந்துணர்வுடன் அரசாங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் தங்களது எதிர்பார்ப்பு எனவும் ம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love