Home இலங்கைUPFAயுடன், மைத்திரி – மகிந்தவின் – சந்திப்புகள் இடம்பெறவுள்ளன…

UPFAயுடன், மைத்திரி – மகிந்தவின் – சந்திப்புகள் இடம்பெறவுள்ளன…

by admin

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினரை இன்று சந்தித்து உரையாடவுள்ளார். குறித்த சந்திப்பு இன்று மாலை இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, தற்போதைய சூழலில் மேற்கொண்ட தீர்மானங்கள் குறித்து கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்கள் நாளை சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

இதன் போது மகிந்த ராஜபக்சவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறுவது தொடர்பிலும், அதற்காக பாராளுமன்றத்தில் எவ்வாறான நகரை்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More