Home இலங்கைமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது மீண்டும் ஆரம்பம்

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது மீண்டும் ஆரம்பம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கடந்த வியாழக்கிழமையில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது மீண்டும் இன்று திங்கட்கிழமை காலை சட்டவைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி கடமையின் நிமித்தம் கொழும்பு சென்றமையினால் அகழ்வுப்பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. குறித்த புதை குழியில் இருந்து இது வரை 21 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உட்;பட மொத்தம் 276 முழு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

தற்போது அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகள் முழுவதையும் அப்புறப்படுத்தும் பணிகள் அதிகளவில் இடம் பெற்ற நிலையில் அவற்றில் 269 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அகழ்வு பணிகளின் போது எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மாதிரிகள் ‘காபன்’ பரிசோதனைக்காக ஜனவரி மாதம் அளவில் புளோரிடாவுக்கு அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More