Home இலங்கைதுரத்தியடிக்கப்பட்டவர்கள் பின் கதவால் வெட்கமின்றி வந்தார்கள்! சஜித்…

துரத்தியடிக்கப்பட்டவர்கள் பின் கதவால் வெட்கமின்றி வந்தார்கள்! சஜித்…

by admin

 

“மூன்றரை வருடங்களுக்கு முன்னர் மக்கள் துரத்தியடித்த அந்த குழுவினர், மீண்டும் அதிகாரத்துக்கு வந்துவிட முடியும் என நினைத்து பின் கதவால் வெட்கமின்றி வந்தார்கள்” இவ்வாறு தெரிவித்தார் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ.

ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிக் கொண்டாட்டம் நேற்று காலிமுகத்திடலில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஓக்டோபர் 26 ஆம் திகதி இந்த நாட்டின் மிகவும் இருண்ட தினமாக பதியப்பட்டுள்ளதாகவும் எதிர்த்தரப்பினரின் சூழ்ச்சியால், பிரதமரும் சட்டபூர்வமான அரசாங்கமும் நீக்கப்பட்ட ஒரு தினம் என்றும் அவர் கூறினார்.

அவ்வாறு ஆட்சியை கைப்பற்றியவர்களுக்கு தோல்விமட்டும்தான் எஞ்சியிருப்பதாகவும் பாராளுமன்றம் மற்றும் நீதிமன்றின் ஊடாக அவர்களை முன்கதவால் விரட்டியடித்துள்ளதாகவும் சஜித் தெரிவித்தார்.

இந்த சூழ்ச்சியால் நாடே பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுத்தது என்றும் இந்த சூழ்ச்சியை யாரும் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என்றும் தெரிவித்த அவர் நாடாளுமன்றில் வைத்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இராணுவத்தினருக்கும் கன்னத்தில் அடித்து மிளகாய்த் தூள் வீசப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More