163
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்களின் காணிகளை விரைந்து விடுவிக்குமாறு கிளிநொச்சி அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் புதிதாக பொறுப்பேற்றுள்ள கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரால்ப் நுகரவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இன்று (19) கிளிநொச்சி படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த 45 காணி விடுவிக்கப்பட்ட நிகழ்வின் போதே இக் கோரிக்கையை விடுத்ததாக அரச அதிபர் தெரிவித்தார். கிளிநொச்சியில் இன்னும் நூற்றுக்கணக்கான ஏக்கர் பொது மக்கள் மற்றும் அரச காணிகள் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளமை குறிப்பிட்டத்தக்கது.
Spread the love