ஐரோப்பிய ஒன்றியத்தின் இராஜதந்திர உரையாடல்கள், கடந்த சில வருட காலமாக ஊடுருவப்பட்டு கேட்கப்பட்டுள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்பட்ட தகவல்களே இவ்வாறு ஊடுருவப்பட்டு கேட்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அண்மையில், சீன இராணுவத்தின் இரகசிய தகவலகள் ஊடுருவப்பட்ட முறையிலேயே ஐரோப்பிய ஒன்றித்தின் இராஜதந்திர மட்டத்திலான தகவல்களும் ஊடுருவப்பட்டு கேட்கப்பட்டுள்ளன.
இந்த வருட ஆரம்பத்தில் சீன ஜனாதிபதி ஸி ஜிங்பிங்கிற்கும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கும் இடையிலான தனிப்பட்ட சந்திப்பு தொடர்பிலான தகவல்களும் ஊடுருவப்பட்டுள்ளன. குறித்த ஊடுருவல்களினால், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளின் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.