மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியின் போது களநடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக பங்களாதேஸ் கிரிக்கெட் அணித் தலைவர் ஷகிப் அல்ஹசனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை சைல்ஹட்டில் நடைபெற்ற பங்களாதேஸ் – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு 20 போட்டியில் பங்களாதேஸ் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த போட்டியில் துடுப்பாட்டத்தின்போது 14-வது ஓவரில் களநடுவர் ஒரு பந்துக்கு வைட் வழங்க மறுத்ததனால் ஷகிப் அல்ஹசன் அதிருப்தியடைந்து நடுவருடன் நீண்ட நேரம் வாக்குவாதம் செய்தார். இது ஐசிசி விதிகளின்படி குற்றமாகும் என்பதனால் அவருக்கு போட்டியின் சம்பளத்திலிருந்து 15 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளதுடன் ஒரு தகுதியிழப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் ஷகிப் அல்ஹசன் பெறும் 2-வது தகுதியிழப்பு புள்ளி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது