Home இலங்கைஇருவேறு விபத்துக்களில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழப்பு

இருவேறு விபத்துக்களில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இருவேறு விபத்து சம்பவங்களில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளனர்.

யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த வவுனியா மதகு வைத்த குளத்தை சேர்ந்த 26 வயதான சிவராசா தினேஷ்கரன் எனும் இளைஞன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று புதன்கிழமை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

அதேவேளை நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) மோதி விபத்துக்கு உள்ளான கிளிநொச்சி பரந்தனை சேர்ந்த 8 வயதான ரவீந்திரகுமார் எனும் மாணவி யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

கிளிநொச்சி விவேகானந்தா ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் குறித்த மாணவி கடந்த 11ஆம் திகதி பாடசாலைக்கு சென்று வீட்டுக்கு பேருந்தில் திரும்பி வீதியை கடக்க முற்பட்ட வேளை நோயாளர் காவு வண்டி மோதி விபத்துக்கு உள்ளானார்.

விபத்துக்கு உள்ளான மாணவியை மீட்டு கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். அந்நிலையில் சிகிச்சை பயனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More