141
கல்கிஸ்ஸ காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட இரத்மலானை வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று (20.12.18) அதிகாலை 2.15 இற்கும் 2.30 இற்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நேற்று மாலை துப்பாக்கி மற்றும் தோட்டக்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸ பகுதியை சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love