Home இலங்கைநாட்டு நிலமை கருதி இடைக்கால கணக்கறிக்கைக்கு ஆதரவு

நாட்டு நிலமை கருதி இடைக்கால கணக்கறிக்கைக்கு ஆதரவு

by admin

நாட்டில் நீடிக்கும் நிலைமையை கருத்திற் கொள்ளும் விதமாக இடைக்கால கணக்கறிக்கைக்கு ஆதரவு அளிக்கப் போவதாக மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ஸவின் இந்த தீர்மானத்தை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க அறிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் ஸ்திரத்தன்மை சீர்குலைவதை தடுப்பது அவசியம் எனவும் இதன் காரணமாக இடைக்கால கணக்கறிக்கையை ஆட்சேபிக்க கூடாது எனவும் மகிந்த ராஜபக்ச கருதுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் அரசாங்கம் அடுத்த வருடத்திற்காக சமர்ப்பிக்கும் நிதி ஒதுக்கீட்டு பிரேரணைக்கும் ஆதரவளிக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More