Home இலங்கைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி,முல்லைத்தீவு மக்களுக்கு, இளைஞர் குழுவினரால் மன்னாரில் நிவாரணப்பொருட்கள் சேகரிப்பு…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி,முல்லைத்தீவு மக்களுக்கு, இளைஞர் குழுவினரால் மன்னாரில் நிவாரணப்பொருட்கள் சேகரிப்பு…

by admin

#குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வட மாகாணத்தில் எற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பு காரணமாக அதிகளவிலான மக்கள் பாதிக்கப்பட்ட முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில் மன்னார் மாவட்டத்தில் நிவாரணப்பொருட்களை சேகரிக்கும் பணியில் இளைஞர் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

-மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று திங்கட்கிழமை(24) காலை குறித்த நிவாரணப்பொருட்கள் சேகரிக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தன்னார்வம் மிக்க இளையோர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் குறித்த பணியில் பல தரப்பினரும் கலந்து கொண்டு ஆதரவினை வழங்கி வருகின்றனர்.

மேலும் மன்னார் நகரப்பகுதியில் குறித்த குழுவினர் நிவாரண பணியில் ஈடுபட்டு வருகின்ற போது அத்தியாவசியப்பொருட்கள் மற்றும் பணம் போன்றன வர்த்தகர்களினாலும் வழங்கப்பட்டு வருகின்றது.

சேகரிக்கப்பட்ட பொருட்களுடன் சில தினங்களில் குறித்த குழுவினர் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக தமது உதவிகளை கையளிக்கவுள்ளனர்.

  

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More