ஆப்கானிஸ்தானில் அரசு அலுவலகங்களை இலக்கு வைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 29 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பல்வேறு நாடுகளின் தூதரக அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகாமையில் உள்ள அரசு அலுவலகங்களை குறிவைத்து நேற்று மாலை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பாதுகாப்பு படையினர் மற்றும் காதவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கி மோதல் இடம்பெற்றதாகவும் சில மணி நேரம் நீடித்த இந்த மோதலில் 2 தீவிரவாதிகளையும் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் ஒரு காவல்துறை அதிகாரியும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தரப்பில் 28 பேர் உயிரிழந்தனர் எனவும் இவர்களில் பெரும்பாலானவர்கள் அரசு ஊழியர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது