இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள சிசிலித் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து மவுண்ட் எட்னா எரிமலை வெடிக்கத் தொடங்கியது.
சிசிலித் தீவில் நேற்று ரிக்டர் அளவுகோலில் 3.3 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதனையடுத்தே எட்னா எரிமலை வெடிக்கத் தொடங்கியது. இதனையடுத்து அங்கு புகைமண்டலம் சூழ்ந்துள்ளதனால் சிசிலி தீவில் அமைந்துள்ள கட்டானியா விமான நிலையம் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த முதற்கட்ட தகவல் ஏதுவும் வெளியாகவில்லை.
எட்னா எரிமலை வெடிப்பு அடிக்கடி ஏற்படுவதாகவும், கடந்த சில மாதங்களாக எரிமலை வெடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதாகவும் இத்தாலியின் பூகோளவியல் மற்றும் எரிமலைகள் பற்றிய தேசிய ஆய்வு நிறுவனம தெரிவித்துள்ளது.