179
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலை மீது தார் ஊற்றி அவமதித்தமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ராஜீவ் காந்தியின் சிலையினை அவமதிப்பு செய்த போது அவர்கள் 1984-ல் சீக்கியருக்கு எதிரான கலவரத்தை ராஜீவ் காந்தி தூண்டிவிட்டதாக தெரிவித்துள்ள கோஷமிட்டதுடன் அதனை கைத்தொலைபேசியில் படம் பிடித்தும் வெளியிட்டுள்ளனர்.
இதையடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் அகாலிதளம் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவரான குர்திப் சிங் கோஷா என்பவரைக் கைது செய்துள்ளதுடன் மேலும் சிலரை தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love