Home உலகம்அமெரிக்காவின் தடுப்பு முகாமில் 2வது குழந்தை பலி

அமெரிக்காவின் தடுப்பு முகாமில் 2வது குழந்தை பலி

by admin


மெக்சிகோ எல்லையில் உள்ள அமெரிக்காவின் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த அகதிகளில் 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.  மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் வறுமை, வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் காரணமாக அங்கிருந்து வெளியேறி மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர்.

இதை தடுக்கும் நடவடிக்கையில் தீவிரமாக உள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அமெரிக்காவினுள் நுழையும் மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படுகின்றார்கள்.

இந்நிலையில் அமெரிக்க அரசின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த குவாத்தமாலாவை சேர்ந்த பெலிப் அலோன்சோ-கோமஸ் என்னும் எட்டு வயது சிறுவன உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார் என அமெரிக்காவின் குடியேற்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மெக்சிகோ வழியாக அமெரிக்க எல்லைக்குள் நுழைந்ததாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட அகதிகளின் குழந்தை உயிரிழப்பது இந்த மாதத்தில் இது இரண்டாவது சம்பவமாகும். இதற்கு முன்பும் குவாத்தமாலைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இந்த உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என டெக்சாஸ் பாராளுமன்ற உறுப்பினரான ஜோவாகின் கேஸ்ட்ரோ வலியுறுத்தி உள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More