133
Hassan Ammar,AP
சிரியாவின் டமாஸ்கஸ் நகரம் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக அந் நாட்டு அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இதன்போது டமாஸ்கஸ் பகுதியிலுள்ள இராணுவக் கிடங்கொன்று தாக்குதலுக்குள்ளானதாகவும் இதில் மூன்று இராணுவத்தினர் உட்பட பலர் காயமடைந்துள்ளனர் எனவும் பெரும்பாலான ஏவுகணைகள் தடுத்து அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love