112
சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக படகு மூலம் சீசெல்ஸ் நாட்டுக்குச் சென்ற இலங்கையர்கள் சிலர் கைது செய்யப்பட்டள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இன்று மீண்டும் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு கைதுசெய்யப்படுவர் என மீன்பிடி திணைக்களத்தின் விசாரணை நடவடிக்கைப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறு இலங்கையிலிருந்து சட்டவிரோத பயணங்களை மேற்கொள்ளும் நபர்களைத் தடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love