Home இலங்கைஹற்றனில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 குடும்பங்கள் பாதிப்பு :

ஹற்றனில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 குடும்பங்கள் பாதிப்பு :

by admin

மலையகத்தின் ஹற்றன்- டிக்கோயா, போடைஸ் பகுதியிலுள்ள தொடர் குடியிருப்பொன்றில் (லயன்) இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தினால் 27 குடும்பங்களைச் சேர்ந்த 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது மக்களின் வீடுகள் மற்றும் உடமைகள் எரிந்து அழிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தீயினை கட்டுப்பதற்கு சில தீயணைப்பு வாகனங்களும் பயன்படுத்தப்பட்டுள்ள போதிலும் 24 வீடுகளுக்கு தீ பரவியுள்ளதாக குறிப்பிட்டுள்ள காவல்துறையினர் இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட 27 குடும்பங்களை சேர்ந்த 150 பேரையும் பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்துள்ளதாக தெரிவித்துள்ள ஹற்றன் காவல்துறையினர் இந்த தீ அனர்த்தம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More