Home இந்தியாமேகாலயாவில் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்க தீயணைப்பு படை வீரர்கள் விரைவு

மேகாலயாவில் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்க தீயணைப்பு படை வீரர்கள் விரைவு

by admin


மேகாலயாவில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பதற்குத் தேவையான 20 தீயணைப்பு படை வீரர்கள் அதிக அழுத்தம் கொண்ட பம்புகளுடன் ஒடிசாவிலிருந்து இந்திய விமானப் படையின் விமானத்தில் மேகாலயாவிற்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு;ளளது

மேகாலயாவில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் பதினைந்திற்கும் மேற்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கி இரண்டு வாரத்திற்கும் மேல் ஆகியுள்ள நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை ஒடிசாவைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளுக்காக சென்றுள்ளனர்.
இவர்கள் மிக உயரழுத்தம் கொண்ட பம்புகளை கொண்டு செல்வதால், சுரங்க வாயிலை மூடியுள்ள நீரை உடனடியாக வெளியேற்றி மீட்பு பணிகளை துரிதப்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே 70 தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்ட போதிலும் சுரங்கக் குழியின் ஆழம் 320 அடியாக உள்ளதனால் அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More