Home இலங்கைஊடகவியலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் வருடாந்த ஒன்றுகூடல்

ஊடகவியலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் வருடாந்த ஒன்றுகூடல்

by admin

 

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் வருடாந்த ஒன்றுகூடல் சாய்ந்தமருது பேல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் நேற்று (29) சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாஸித், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல். அமானுல்லா, கல்முனை மாநகர பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஸ் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தகர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது மூத்த ஊடகவியலாளர்களான வாழ்நாள் சாதனையாளர், ஊடக முதுசம், கலாபூசனம் ஏ.எல்.எம். சலீம், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர், கலை இலக்கிய வித்தகர், கலாபூசனம் மீரா எஸ். இஸ்ஸடீன் மற்றும் கிழக்கு மாகாண வித்தகர் பி.எம்.எம்.ஏ. காதர் ஆகியோர் இராஜாங்க அமைச்சர் ஹரீஸினால் பொன்னாடை போர்த்தி பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் இதன்போது இராஜாங்க அமைச்சர் ஹரீஸின் சேவையினை பாராட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சம்மாந்துறை அமைப்பாளர் ஸபீக் இஸ்மாயிலினால் நினைவுப் பா வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது ஊடகவியலாளர்களின் மறக்க முடியாத அனுபவப் பகிர்வு மற்றும் பல்வேறு பட்ட கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More