டெல்லியில் உள்ள ஆச்சிரமத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக சாமியார் விரேந்தர் தீக்சித் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. டெல்லியில் பாபா விரேந்தர் தீக்சித்துக்கு சொந்தமான அத்யாத்மிக் விஷ்வா வித்யாலயா ஆச்சிரமத்தில சிறுமிகள் மற்றும் பெண்கள் அடைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் டெல்லி பெண்கள் ஆணையம் மற்றும் குழந்தைகள் நலக் குழுவானது காவல்துறையினருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை நடவடிக்கையின் போது ஆசிரமத்தில் பல சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 41 சிறுமிகள் மீட்கப்பட்டனர். மேலும் பல சிறுமிகள் அங்கு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
, இந்த வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் பாபா விரேந்தர் தீக்சித் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இல்லையெனில் அவர் மீது கைது ஆணை பிறப்பிக்கப்படும் எனவும் உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்றம் அவர்களது 8 ஆசிரமங்களின் பட்டியலையும் சமர்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. அத்துடன் சி.பி.ஐ. விசாரணைக்கும் உத்தரவிட்டதனையடுத்து ஆசிரமத்தில் பெண்கள், சிறுமிகள் சித்ரவதை செய்தது தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்தியத் தலைநகர் டெல்லியும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் பெண்கள் சிறுமிகளும்…. டெல்லி ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 41 சிறுமிகள் மீட்பு…
Dec 22, 2017 @ 07:10
இந்தியாவின் டெல்லியில் உள்ள ஒரு ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 41 சிறுமிகள் காவல்துறையினரினர் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளதாக டெல்லி பெண்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் இயங்கிவரும் பாபா விரேந்தர் திக்சித்துக்கு சொந்தமான அத்யாத்மிக் விஷ்வா வித்யாலயா என்னும் ஆசிசரமத்தில் சிறுமிகள் மற்றும் பெண்கள் அடைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாக கிடைத்த தகவலினையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் டெல்லி பெண்கள் ஆணையகம் மற்றும் குழந்தைகள் நலக் குழுவானது காவல்துறையுடன் இணைந்து நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
இச்சோதனையில், அந்த ஆசிரமத்தில் பல சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர் எனவும் அவர்களில் 41 சிறுமிகளை காவல்துறையினர் மீட்டடுள்ளனர் எனவும் அவர்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பல சிறுமிகள் அங்கு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுகுறித்து டெல்லி பெண்கள் ஆணையகத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் தெரிவிக்கையில் டெல்லி ரோகினி பகுதியில் உள்ள ஆசிரமத்தில் சிறுமிகள் கைதிகள் போல் அடைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்கள் மிகவும் துன்புறுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர்களால் இருந்த நிலைமை குறித்து பேச முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளர்h.
சிறையில் இருப்பது போல சிறுமிகள் ஆசிரமத்தின் அறைகளில் இருந்தனர் எனவும் ஆசிரமத்தின் உரிமையாளரான பாபா விரேந்தர் திக்சித் கைது செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்த அவர் மேலும் ஆசிரமத்தில் உள்ள மற்ற சிறுமிகளை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு உயர்நீதிமன்றம் உதவ வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் பாபா விரேந்தர் திக்சித் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இல்லையெனில் அவரை கைது செய்ய கைது ஆணை பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ள டெல்லி உயர்நீதிமன்றம் அவர்களது 8 ஆசிரமங்களின் பட்டியலையும் சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.