கேப்பாபுலவில் விடுவிக்கப்பட்ட பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில், இன்று இராணுவ ஏற்பாட்டில் பொங்கல் பொங்கி விசேட வழிபாடு ஒன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
கேப்பாபுலவில் படையினர் வசமிருந்த காணிகளில் இருந்து, 133.4 ஏக்கர் காணி கடந்த 28ஆம் திகதி மக்கள் முன்னிலையில் மாவட்ட அரசாங்க அதிபரிடம் படையினர் கையளித்தனர். இதன்போது, கேப்பாபுலவு பகுதியில் 111.5 ஏக்கர் காணிகளும், சீனியாமோட்டை பகுதியில் மான 21.84 ஏக்கர் காணிகளுமாக மொத்தமாக 133.34 ஏக்கர் காணிகள் கையளிக்கப்பட்டன. இந்தப் பகுதிகளுக்கு மக்கள் இன்று சென்றுள்ள நிலையில் பிள்ளையார் கோவிலில் பொங்கல் வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Spread the love
Add Comment