இறுதி யுத்தத்தின் பின் ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு – வற்றாப்பளை வீதி, எட்டு வருடங்களின் பின்னர், மக்களின் பயன்பாட்டிற்காக, இன்று (01.01.18) திறந்துவிடப்பட்டுள்ளது.
கேப்பாப்புலவில் ராணுவ கட்டுப்பாட்டில் காணப்பட்ட பொதுமக்கள் சிலரின் காணிகள், அவர்களிடம் ஏற்கனவே கையளிக்கப்பட்ட நிலையில், மக்களின் பாவனைக்காக திறந்துவிடப்பட்டுள்ள புதுக்குடியிருப்பு – வற்றாப்பளை வீதியில், மக்கள் தமது போக்குவரத்து நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்குச் செல்லும் இந்த வீதி, மூடப்பட்டிருந்தால், கடந்த காலங்களில் மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர். குறிப்பாக இந்த ஆலையத்தில் இடம்பெறும் வைகாசி பொங்கலின் போது மக்கள் பாத யாத்திரை செல்லும் போது, இவ்வீதி மூடப்பட்டிருந்ததால், கற்களும் முட்களும் நிறைந்த காட்டுப்பகுதியிலேயே பக்தர்கள் தமது யாத்திரையை மேற்கொண்டிருந்தார்கள். இன்று இந்த வீதி திறக்கப்பட்ட அதேவேளை கேப்பாபுலவு பிள்ளையார் ஆலயம் ஒன்றில் பூஜையும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.