189
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாணம் நீர்வேலியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் சிறுமி உட்பட இருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முச்சக்கரவண்டி மற்றும் ஹயஸ் ரக வாகனம் ஆகியன நேருக்கு நேர் மோதியதனாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் அதில் பயணித்த சிறுமியும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதேவேளை நேற்று திங்கட்கிழமை அரியாலை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள். உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love