குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இளவரசர் ஹரியின் திருமணம் பிரித்தானிய பொருளாதாரத்தில் சாதக விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய இளவரசர் ஹரி, அமெரிக்க நடிகை மெஹன் மார்கலை திருமணம் செய்துகொள்ள உள்ளார். எதிர்வரும் மே மாதம் ஹரி – மெஹான் திருமணம் நடைபெறவுள்ள நிலையில் இந்த திருமணம் காரணமாக பிரித்தானிய பொருளாதாரத்தில் 500 மில்லியன் பவுண்ட்ஸ் வருமானம் கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் 200 மில்லியன் பவுண்ட்கள் சுற்றுலாத்துறையின் ஊடாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருமணமானது சுமார் 100 மி;ல்லியன் பவுண்ட் இலவச விளம்பரத்தை பிரித்தானியாவிற்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.