குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளருக்கு எதிராக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் யாழ். காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாநகர சபை வேட்பாளரான தமிழ் தேசிய கூட்டமைப்பில் ரெலோ சார்பில் போட்டியிடும் வேட்பாளரான ராஜ்மோகன் என்பவருக்கு எதிராக நேற்று புதன்கிழமை யாழ். காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தனது பெயரை பயன்படுத்தி மற்றுமொரு தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரை ராஜ்மோகன் தொலைபேசி ஊடாக மிரட்டியதாகவும் அதனால் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் றீகன் தனது முறைபாட்டில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை வேட்பாளரான உதயஸ்ரீ என்பவர் தனக்கு தொலை பேசி ஊடாக றீகன் என அறிமுகமான ஒருவர் உள்ளூராட்சி தேர்தலில் இருந்து விலகவேண்டும் என மிரட்டியதாக யாழ். காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.