காத்தான்குடி பிரதேசம் டெங்கு அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டள்ளது. இன்றையதினம் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற உயர் மட்டக் கூட்டத்தின் போது இவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
காத்தான்குடி பிரதேசத்தில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதனால் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவை இவ்வாறு டெங்கு அபாய பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படுவதென, கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஒரு வாரத்தில், காத்தான்குடியில் 600 வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு பரிசோதனை நடவடிக்கையின் போது 100 வீடுகளில் டெங்கு நுளம்புக் குடம்பிகள் உள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.