Home இலங்கைதிருகோணமலை மாணவர் படுகொலை குறித்த விசாரணகைள் ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும்

திருகோணமலை மாணவர் படுகொலை குறித்த விசாரணகைள் ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார். இந்தக் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் வெளிநாட்டில் இருப்பதனால் விசாரணைகளை தொடர்வதில் சிக்கல்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும் அண்மைய சட்ட திருத்தங்களின் அடிப்படையில் நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் வழக்கு விசாரணைகளை நடத்தக் கூடிய சாத்தியமுண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார். 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி திருகோணமலை கடற்பரப்பில் இந்த மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More