Home சினிமாரஜினிகாந்தும், கமல்ஹாசனும் ஒன்றாகினரோ…..

ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் ஒன்றாகினரோ…..

by admin

நடிகர் சங்க கட்டிட நிதி திரட்டுவதற்காக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக நடத்தப்படும் நட்சத்திர கலைவிழா மலேசியாவில் நடைபெற்று வருகின்ற நிலையில் நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் ஹெலிகொப்டரில் ஒன்றாக வந்து இறங்கினர். அவர்களை விழாக் குழுவினர் வரவேற்று அழைத்துச் சென்றனர். இருவரையும் ஒன்றாகப் பார்த்த ரசிகர்கள், நட்சத்திரங்கள் கோஷம் எழுப்பி வரவேற்றனர்.

இந்த நட்சத்திர கலைவிழாவில் கலந்து கொள்வதற்காக 300-க்கும் மேற்பட்ட திரை நட்சத்திரங்கள் மலேசியா சென்றுள்ளனர். நடிகர் ரஜினிகாந்தும் இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் இரவே கிளம்பி மலேசியா சென்றுள்ளார் அதேவேளை கமல்ஹாசன் அமெரிக்காவில் இருந்து இன்று மலேசியா வந்துள்ளார்.. அத்துடன் இன்றும், நாளையும் கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன. இந்தவகையில்

நேற்று கோலாலம்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நட்சத்திர விளையாட்டு வீரர்களின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. கிரிக்கெட் அணி வீரர்களின் அறிமுக நிகழ்ச்சியும், ஜெயம் ரவி – ஆர்யாவின் கால்பந்து அணியினரின் அறிமுக நிகழ்ச்சியும் நடந்தது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More