168
நுவரெலியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த, சுவிற்சலாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அங்குள்ள சிங்கல் ரீ காட்டுப்பகுதியில் உள்ள மலையுச்சிக்கு, தனியாகச் சென்றிருந்த அந்தப் பெண்ணை கத்தியைக் காண்பித்து, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக, விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. சம்பவத்தையடுத்து விரைந்து செயற்பட்ட காவற்துறையினர், அந்த மலையுச்சிக்கு கீழே உள்ள ஸ்காப் தோட்டத்தைச் சுற்றிவளைத்து, சந்தேகத்தின் பேரில் 11 பேரை கைதுசெய்துள்ளனர்.
Spread the love