சீன கடல் பகுதியில் மற்றொரு சரக்கு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் தீப்பற்றி எரியும் ஈரான் எண்ணைய் கப்பல் வெடித்து சிதறலாம் என அஞ்சப்படுவதுடன் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரான் நிறுவனத்துக்கு சொந்தமான பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள குறித்த சரக்கு கப்பல் ஈரானிலிருந்து கச்சா எண்ணையுடன் தென் கொரியாவுக்கு சென்று கொண்டிருந்த வேளை சீனாவின் கடற் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்து காரணமாக எரியத் தொடங்கிய ஈரானிய எண்ணைய் கப்பலில் இருந்த 32 பேருக்கும் என்ன நடந்தது என தெரிய வராத நிலையில் சரக்கு கப்பலில் வந்த 21 பேரும் சீன கடலோர காவல் படைனரால் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் ஈரான் எண்ணைய் கப்பல் வெடித்து விரைவில் சிதறலாம் அல்லது, கடலில் மூழ்கி விடலாம் என அஞ்சப்படுவதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறு நிகழ்ந்தால் அந்த கப்பலில் உள்ள சுமார் 10 லட்சம் கொள்கலன்களில் உள்ள கச்சா எண்ணைய் சீன கடல் பகுதியில் பரவி ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் என கவலை வெளியிடப்பட்டுள்ளது