Home இலங்கைமுழங்காவிலில் கனரக வாகனத்தில் சிக்கி மாணவன் பலி

முழங்காவிலில் கனரக வாகனத்தில் சிக்கி மாணவன் பலி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் நேற்று(09) மாலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு மாணவன் மற்றும் சாரதி படுகாயமடைந்துள்ளனர். துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவர்கள் மீது அதே திசையில் பயணித்த கனரக (JCB) வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் முழங்காவில் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவரே உயிரிழந்ததுடன், மற்றுமொரு மாணவன், கனரக வாகன சாரதி ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

வாகனம் வீதியில் துவிச்சக்கர வண்டியில் சென்றுக்கொண்டிருந்து மாணவர்கள் மீது மோதுண்டதனால் மாணவன் ஒருவன் அதனுள் சிக்குண்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. முழங்காவில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More