குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எதிர்வரும் 2021ம் ஆண்டு வரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியில் நீடித்திருப்பார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நேற்றைய தினம் ஆரம்பமான சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசாங்கம் எதிர்வரும் 2020ம் ஆண்டு வரையில் ஆட்சியில் நீடிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டுவது உறுதியானது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆறு ஆண்டுகளுக்கு பதவி வகிக்க முடியுமா என உச்ச நீதிமன்றிடம் ஜனாதிபதி சட்டம் விளக்கம் கோரியுள்ள நிலையில், துமிந்த திஸாநாயக்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.