எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஒடுக்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இந்தியா – பாகிஸ்தான் இடையே அண்மையில் இரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்றதாக இந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
பயங்கரவாத ஒழிப்பு தொடர்பாக பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நஸீர் கான் ஜன்ஜுவாவை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அண்மையில் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் இந்தப் பேச்சுவார்த்தையானது தாய்லாந்தில் மூன்று வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது எனவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளர்h.
தெற்காசிய பிராந்தியத்திலிருந்து தீவிரவாதத்தை ஒழிப்பது குறித்தும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒடுக்குவது குறித்தும் இரு நாட்டு பிரதிநிதிகளும் விவாதித்தனர் என அவர் தெரிவித்துள்ளர்h. பதான்கோட் தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானுடன் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையை இந்தியா தாற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது