Home இந்தியாகர்நாடகாவில் சொகுசு பேருந்து விபத்து – 8 பயணிகள் உயிரிழப்பு

கர்நாடகாவில் சொகுசு பேருந்து விபத்து – 8 பயணிகள் உயிரிழப்பு

by admin


இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு பேருந்து விபத்தில் சிக்கியதில் 8 பயணிகள் உயிரிழந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவிலிருந்து தர்மசாலாவை நோக்கி நேற்றிரவு புறப்பட்ட குறித்த சொகுசு பேருந் இன்று அதிகாலை சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதிக்கு அருகே இருந்த குளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 5 பயணிகள் சம்பவ இடத்திலே உயிரிழந்ததாகவும் மேலும் மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்திலிருந்த அனைவரும் காயங்களுக்குள்ளாகியநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More